சுயதொழில் செய்ய வேண்டுமா? நீங்களும் உங்கள் வீட்டில் இருந்து செய்யலாம்... கைவினை சுயதொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு



கிரிஸ்டல் நகை தயாரிப்பு !

கிரிஸ்டல் நகையின் மீது பெண்களுக்கு அதிக நாட்டம் உள்ளது. ஏனென்றால் அவற்றின் கலைநயம் மற்றும் குறைந்த விலை என்பதால் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் என அனைவரும் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். எனவே சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தொழிலாகும். பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு ஆகும். இவற்றில் அதிக லாபமும் பெறலாம்.


  தேவையான பொருட்கள் :


 👉 இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது, சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் கோல்டு, பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல், கியர் வயர், கியர் லாக், ஊக்கு ஒரு செட், காந்த ஊக்கு, ஸ்க்ரூ செட், கட்டிங் பிளேயர் ஆகியவை கிரிஸ்டல் நகை தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகும். (குறிப்பு : பேன்சி ஸ்டோர்களில் இப்பொருட்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம்).


 தயாரிக்கும் முறை :


 👉 கிரிஸ்டல் நகையை மிகவும் எளிய முறையில் தயாரிக்க முடியும். அதற்கு ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான்.


 👉 சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி) நடுத்தர நீளம் (ஒன்றரை அடி) அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.


 👉 முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கத்தரிக்கோல் கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும்.


 👉 2 பேர் கூட்டாக செய்தால் முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு இரு முனைகளில் ஒரு பால் ஒரு சக்கரியா ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும்.


 👉 அதே முறையில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும்.


 👉 இங்கு ஊக்கு காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.


  விற்பனை :


 👉 ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 வரை தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 வரை தயாரிக்க முடியும். ஒரு நாள் உற்பத்திக்கு ரூ. 5000 செலவில் தயாரிக்கப்படும் கிரிஸ்டல் நகையை குறைந்தபட்சம் 30 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யலாம்.


 👉 இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 6500 வருவாய் பெறலாம் இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 1500 லாபம் பெறலாம். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால் வருவாய் கூடும்.


 

நன்றி..

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன்னம்பிக்கை கதைகள் - பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி

உ. சகாயம்.IAS

தன்னம்பிக்கை கதைகள்- ஒரு மூதாட்டியின் கதை..