விருட்ச சாஸ்திரம் : வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா?

 


விருட்ச சாஸ்திரம்...!!


வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா?


🍈 கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மேலும் சிறிய அளவிலான, அதேசமயம் மிகுந்த ருசியான பழங்களைத் தரக்கூடியது கொய்யா மரம் தான்.


🍈 கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.


🍈 ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது கொய்யாப்பழம் ஆகும். மலிவு விலைக்கு விற்கப்படும் கொய்யாப்பழம் பெரும்பாலும் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும். கொய்யாப்பழம் ஒருவிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன.


🍈 வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற தாது உப்புகளும் இதில் உள்ளது.


🍈 கொய்யா மரத்தின் இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும், எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.


🍈 கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் உயர்தரமான ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.


🍈 கொய்யா மரத்தின் பட்டை காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்தும்.


எங்கு வளர்க்கலாம்?


🍈 கொய்யா மரத்தை வீட்டு தோட்டங்களிலும், வயலின் வரப்புகளிலும் வளர்க்கலாம். 



எந்த திசைகளில் வளர்க்கலாம்?


🍈 வீட்டின் தென்மேற்கு பகுதி, தெற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் கொய்யா மரங்களை வளர்க்கலாம்.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன்னம்பிக்கை கதைகள் - பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி

உ. சகாயம்.IAS

தன்னம்பிக்கை கதைகள்- ஒரு மூதாட்டியின் கதை..