காலம் மறந்த பொக்கிஷங்கள் !!
வரலாறு (பெயர்) விளையாட்டு
🍀சாலைகளுக்குப் பெயர் வைத்து, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் காலம்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.
🍀காந்தி தாத்தா, நேரு மாமா, அன்னை தெரசா, பாரதியார், திருவள்ளுவர், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்களெல்லாம் யார்? அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? ஏன் நாம் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? என்றவாறு கேள்விக் கணைகளை நம் மீதே தொடுப்பார்கள்.
விளையாட்டு :
🍀குழந்தைகள் ஒன்றைச் சொல்லித்தந்தால் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் பொது அறிவினை வளர்த்துவிடலாம்.
🍀இதற்காக அடுக்குமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ராகத்தோடு பாடி சொல்லிக்கொடுக்கும்போதும் குழந்தைகள் மனதில் அப்படியே பதியும்.
🍀நம் சுதந்திரத் தியாகிகள், நம் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், அவர்களின் பெயர்களை சொல்லி, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் எடுத்துச்சொல்ல தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைத்துக் கொண்டு விளையாடலாம்.
விளையாடும் முறை :
அதோ பாரு காரு...
காருக்குள்ள யாரு...
நம்ம மாமா நேரு...
நேரு என்னா சொன்னாரு...
நல்லா படிக்கச் சொன்னாரு
🍀இந்தப் பாட்டு விளையாட்டால் குழந்தைகளுக்கு நேருவைப் பற்றிக் கூறுவதோடு, படிக்கும் ஆர்வத்தையும் ஊட்டலாம்.
அதோ பாரு காரு...
காருக்குள்ள யாரு...
நம்ம அம்பேத்கரு...
அம்பேத்கரு என்ன சொன்னாரு...
சட்டம் சொல்லித்தந்தாரு...
🍀இந்தப் பாட்டு விளையாட்டால் குழந்தைகளுக்கு அம்பேத்கர் பற்றியும், சட்டம் பற்றியும் தெரியப்படுத்தலாம்.
அதோ பாரு தாத்தா...
தாத்தா என்றால் யாரு...
தாத்தா என்றால் காந்தி தாத்தா...
காந்தி தாத்தா என்ன செய்தாரு...
நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாரு...
🍀இந்தப் பாட்டு விளையாட்டால் குழந்தைகளுக்குக் காந்தியடிகள் பற்றியும், சுதந்திரம் பற்றியும் எடுத்துரைக்கலாம்.
🍀இதுபோன்ற பாட்டு விளையாட்டின் மூலம் நம் முன்னோர்களைப் பற்றியும், நம் உறவினர்களைப் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும்போது, அவர்களின் மனதில் அப்படியே பதியும். குழந்தைகள் கூடி விளையாடும்போது, அவர்களின் விருப்பம்போல் பல பெயர்களை சேர்த்து விளையாடுவார்கள். இதனால் பலரைப்பற்றிய அறிய தகவல்களை எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
விளையாட்டின் பயன்கள் :
🍀வரலாற்றினை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
🍀ஞாபகத்திறனை வளர்த்துக்கொள்ள மிகச் சுலபமான முறை இது.
🍀குழந்தைகள் வளர்ந்து படிக்கும் காலத்தில் மிகவும் பயன் தரும்.
நன்றி..
கருத்துகள்
கருத்துரையிடுக