APJ ABDHUL KALAM HISTORY
கலாமின் பிறப்பும் வளர்ப்பும்
இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களில் வடக்கே இருப்பது ‘காசி’ என்றால் தெற்கே இருப்பது ‘இராமேஸ்வரம்’ ஆகும். இவை இரண்டுமே சிவ தலங்கள் என்பது யாவரும் அறிந்தே.
இப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த 'இராமேஸ்வரத்தில்’ 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் 'அவுல்பக் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர் - ஆசியம்மா' என்ற தம்பதிகளுக்கு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் அப்துல் கலாம். மரைக்காயருடைய குடும்பம் மிகவும் பெரிய குடும்பம். அதில் கலாம் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார்.
அப்துல் கலாமின் தந்தை ஒரு இஸ்லாமியராக இருந்த போதிலும் கூட அவரது தோழர்களில் பலர் இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த மத ஒற்றுமையை தனது குழந்தைப் பருவத்திலேயே பார்த்த கலாம் அவர்கள். தமது வாழ் நாள் முழுவதுமே அனைத்து மதத்தினரிடமும் மத நல்லிணக்கத்துடன் நடந்து கொண்டார். அத்துடன் தனது தாயாரிடம் நீதிக் கதைகளையும், பிறருக்கு உதவும் பண்பினை தந்தையிடமும் கற்றுக் கொண்டார்.
இப்படியாக வறுமையில் வளர்ந்தாலும். வறுமையிலும், செம்மை என்று சொல்வார்களே அந்த விதத்தில் தான் கலாம் வாழ்ந்தார்.
(தொடரும்....)
http://wingstechpdkt.blogspot.com
கருத்துகள்
கருத்துரையிடுக