விருட்ச சாஸ்திரம் : வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா?

விருட்ச சாஸ்திரம்...!! வீட்டில் கொய்யா மரத்தை வளர்க்கலாமா? 🍈 கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மேலும் சிறிய அளவிலான, அதேசமயம் மிகுந்த ருசியான பழங்களைத் தரக்கூடியது கொய்யா மரம் தான். 🍈 கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும். 🍈 ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது கொய்யாப்பழம் ஆகும். மலிவு விலைக்கு விற்கப்படும் கொய்யாப்பழம் பெரும்பாலும் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும். கொய்யாப்பழம் ஒருவிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். இப்பழத்தில் பலவகைகள் உள்ளன. 🍈 வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற தாது உப்புகளும் இதில் உள்ளது. 🍈 கொய்யா மரத்தின் இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும், எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. 🍈 கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின்...