இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் முதலமைச்சர் ஆனால்...

 முதலமைச்சர் ஆனால் எனது பணிகள்:   என் முதல் பணி நான் குடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.    படித்தவர்கள் மட்டுமே வேட்பாளராக இருக்க வேண்டும். ஒரு தொகுதியில் உள்ள 5 வார்டுகளுக்கு ஒரு இலவச சேவை மையம் அமைக்கப்படும். அது நேரடியாக என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கப்படும். வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவராக மட்டுமே இருப்பார்கள்.    தண்ணீர் பாதுகாப்பதாகத்தான் இருக்கும். அதாவது குளங்கள், ஏரிகள், ஆறுகளிலிருந்து பிரிந்து நீர்ப்பாசாணத்திற்குச் செல்லும் குறுகிய கால்வாய்கள் மற்றும் சிறு ஓடைகள் ஆகியவற்றை அகலப்படுத்துவேன்.    பூரண மது ஒழிக்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களுக்க தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.    வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுதல் வேண்டும் மற்றும் இது கட்டாயமாக்கப்படும்.    மழைநீர் சேகரிப்பு திட்டம் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் செயல்படுத்த வேண்டும்.    தொழிலாளர் மற்றும் தொழில் துறையில் முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படும்,   வேலையில்லா திண்டாட்டத்தை அறவே ஒழிப்பேன். அதற்கான முயற்...

தன்னம்பிக்கை கதைகள்- ஒரு மூதாட்டியின் கதை..

 தன்னம்பிக்கை கதைகள்- ஒரு மூதாட்டியின் கதை..  வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்திவந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.    ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிறமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை எனக் கூற விரும்பினாள்.    கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து. அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில் இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.    காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்ப...

காலம் மறந்த பொக்கிஷங்கள் !!

வரலாறு (பெயர்) விளையாட்டு 🍀சாலைகளுக்குப் பெயர் வைத்து, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் காலம்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். 🍀காந்தி தாத்தா, நேரு மாமா, அன்னை தெரசா, பாரதியார், திருவள்ளுவர், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் பற்றிக் கேட்டால், அவர்களெல்லாம் யார்? அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? ஏன் நாம் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? என்றவாறு கேள்விக் கணைகளை நம் மீதே தொடுப்பார்கள். விளையாட்டு : 🍀குழந்தைகள் ஒன்றைச் சொல்லித்தந்தால் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் பொது அறிவினை வளர்த்துவிடலாம்.  🍀இதற்காக அடுக்குமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ராகத்தோடு பாடி சொல்லிக்கொடுக்கும்போதும் குழந்தைகள் மனதில் அப்படியே பதியும். 🍀நம் சுதந்திரத் தியாகிகள், நம் நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இவர்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு தெரியாது என்பதால், அவர்களின் பெயர்களை சொல்லி, அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் எடுத்துச்சொல்ல தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைத்துக் கொண்டு விளையாடலாம். விளையாடும் முறை : அதோ பாரு காரு... காருக்குள்ள யாரு... நம்ம மாமா நேரு...